கடலோடியின் வலைப்பதிவுகள்
Sunday, 07.05.06
தலைவரு ஷுமேக்கர் தானுங்கோ
Friday, 12.08.05
இசின்பயேவா - The Roof Raiser
ஹெல்சிங்கியில் கடந்த ஒருவார காலமாக நடந்து வரும் உலக தடகள போட்டிகளில் முதல் உலக சாதனையை இன்று கழி ஊன்றி தாண்டும் பிரிவில் (போல் வால்ட்) ரஷ்யாவின் இசின்பயேவா நிகழ்த்தினார். சாதனை நிகழ்த்துவது இவருக்கு ஒன்றும் புதியது அல்ல. இது அவரது 18வது உலக சாதனையாகும். கடந்த மாதம்தான் லண்டனில் நடைபெற்ற போட்டி ஒன்றில் 5.0 மீட்டர் தாண்டி தனது முந்தய உலக சாதனையை முறியடித்திருந்தார்.
இன்றைய போட்டியில் அவருக்கு ஈடுகொடுத்து தாண்டும் அளவிற்கு வேறு யாரும் இல்லாததால் போட்டி கொஞ்சம் சுவாரசியமின்றியே இருந்தது. மற்றவர்கள் எல்லாம் 4.0 மீட்டரில் இருந்து ஐந்து ஐந்து சென்டிமீட்டராக உயர்த்தி கொண்டிருந்தனர். இவர் தனது முதல் முயற்சியிலேயே 4.50 மீட்டர் சாதாரணமாக தாண்டி மற்றவர்களை வெறுப்பேற்றினார்.

Monday, 31.01.05
நரேன் கார்த்திகேயன் ஃபார்முலா ஒன் ஒட்டுனர் ?
நரேன் கார்த்திகேயன் ஃபார்முலா ஒன் ஒட்டுனர் ?
2005 - ம் வருட ஃபார்முலா ஒன் பந்தயத்தில் ஜோர்டானிற்காக நரேன் கார்த்திகேயன் ஒட்டுனராக தேர்ந்தெடுக்கப்பட 90 % வாய்ப்பு உள்ளதாக ஜோர்டானின் இயக்குனர் 'கார்லின்' பிபிசிக்கு பேட்டி.
இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்தால் ஃபார்முலா ஒன்னில் பங்கு பெரும் முதல் இந்தியராக இருப்பார் நரேன் !!!

10:25:40 -







